இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான, 'கர்ணன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்த படத்திற்கு பின், மீண்டும் மற்றொரு படத்தில் இருவரும் ஒன்று சேர உள்ளதாக தனுஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளார். 

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான, 'கர்ணன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்த படத்திற்கு பின், மீண்டும் மற்றொரு படத்தில் இருவரும் ஒன்று சேர உள்ளதாக தனுஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் "கொடியன்குளம்" என்கிற கிராமத்தில் நடந்த வன்முறைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் 'அசுரன்' படத்தை தொடர்ந்து, இந்த படத்திலும் தன்னுடைய வெறித்தனமான நடிப்பை தனுஷ் வெளிப்படுத்தி இருந்தார்.

அதே போல்.. ஒவ்வொரு கதாபாத்திரமும், கர்ணன் வெற்றியின் மகுடத்திற்கு நவரத்தினங்கள் பொருந்தியது போல் பொருத்தமாக இருந்ததாக விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர். முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்துள்ளதால், இந்த படத்தின் நாயகி ரஜிஷா விஜயனுக்கு தொடர்ந்து தமிழில் நடிக்க பட வாய்ப்புகள் தேடி செல்வதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் 'கர்ணன்' படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியை... கொண்டாடி அனுபவித்த தனுஷ், மீண்டும் 'கர்ணன்' பட இயக்குனர், மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிக்க உள்ளதை உறுதி செய்துள்ளார். இதுகுறித்த, அதிகார பூர்வ தகவலையும் தன்னுடைய த்விட்டேர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த படத்தின் ப்ரீ புரோடுக்ஷன் பணிகள் நடந்து வருவதாகவும், அடுத்த வருடம் இந்த படத்தின் பணிகள் துவங்கும் என தெரிவித்துள்ளார். இது தனுஷ் ரசிகர்களை உச்சாகமடைய செய்துள்ளது.

மாரி செல்வராஜ் அடுத்ததாக, விக்ரம் மகன் 'துருவ்' நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த பணிகள் முடிந்த பின்னர் மீண்டும் தனுஷை வைத்து இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல்... தனுஷும் தற்போது ஹாலிவுட், மற்றும் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில், தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள... 'ஜகமே தந்திரம்' ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Scroll to load tweet…