again join mersal heroines
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடந்த தீபாவளி தினத்தன்று பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வெளிவந்த திரைப்படம் மெர்சல். திரைப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய ஆதரவு கிடைத்தாலும் ஜிஎஸ் டி , மற்றும் டிஜிட்டல் இந்தியா ஆகியவற்றை பற்றி விஜய் பேசிய வசனங்களுக்கு தேசிய கட்சியினர் மிகப் பெரிய எதிர்ப்பை தெரிவித்தனர்.
இருப்பினும், அனைத்து ரசிகர்களின் ஆதரவோடும் தற்போது வரை மெர்சல் திரைப்படம் திரையரங்கங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நித்யாமேனன், சமந்தா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர். நித்யா மேனன் இந்தப் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அவரது நடிப்பு பலரது பாராட்டையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீண்டும் காஜல் அகர்வால் மற்றும் நித்யாமேனன் இணைத்து ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளனர். இந்தப் படத்தை இயக்குனர் சுதீர் வர்மா இயக்க உள்ளார். கதாநாயகனாக, சர்வானந்த் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் "எங்கேயும் எப்போதும்" மற்றும் ஜே கே என்னும் நண்பனின் வாழ்கை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது நித்யா மேனன் மலையாளத்தில் நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்தப் படப் பிடிப்பில் கலந்துகொள்வர் என்றும், காஜல் அகர்வால் குயின் பட ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் படப் பிடிப்பு முடித்த பிறகு கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
