again fight between mumtaz and nithya in big boss house

 பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில், மும்தாஜுக்கும் பாலாஜியின் மனைவி நித்யாவிற்கும் இடையே, அடிக்கடை சண்டை நடக்கிறது. இவர்களுக்குள் இருக்கும் ஈகோ பிரச்சனையால் உருவாகும் சண்டை, தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களையும் சேர்த்து பாதிக்கிறது. நித்யாவும் சிரித்து கொண்டே பிறரின் கோபத்தை தூண்டுகிறார்.

ஏற்கனவே சமையல் வேலை செய்வது தொடர்பாக இவர்களுக்குள் ஆரம்பித்த பிரச்சனை, மறுபடியும் இன்று தொடர்ந்திருக்கிறது. இத்துடன் மூன்றாவது நாளாக, இந்த இருவரும் சமைக்கும் இடத்தில் வைத்து சண்டையை துவக்கி இருக்கின்றனர்.

நித்யாவிற்கு மும்தாஜ் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பது ஒரு பிரச்சனையாக தெரிகிறது.இதனை ஒவ்வொரு நாள் நிக்ழ்ச்சியின் போதும் பார்க்க முடிகிறது. அதே போல மும்தாஜ், ஏற்கனவே நித்யா சுத்தமான பழக்கவழக்கங்களை மேற்கொள்வது இல்லை. என்றும் கூறி இருந்தார். அந்த காரணத்தினாலோ என்னவோ, அவர் நித்யாவிடம் சமையல் வேலைகளை அதிகம் பகிர்ந்து கொள்வது இல்லை போல.

தற்போது வெளியாகி இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது பிரமோவில், நித்யாவிடம் கலந்தாலோசிக்காமல் மும்தாஜ் சமைப்பது தொடர்பாக முடிவெடுத்ததற்காக, நித்யா கோபம் கொள்கிறார். மும்தாஜ் இனி உங்களிடம் கேட்டு செய்கிறேன், என பதிலளிக்கிறார். நான் இங்கே தான் இருந்தேன். நீங்க அதை கவனிக்கல என நித்யா கூற. இனி இங்கயே இருங்க, நான் கூப்படறேன் என மும்தாஜும் பதிலளிக்கிறார்.

இன்றைய #பிக்பாஸ் இன் இரண்டாவது ப்ரோமோ! 😲😲 #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss@Vivo_Indiapic.twitter.com/iddCSjCIuq

— Vijay Television (@vijaytelevision) June 22, 2018

அப்போது நித்யா இங்கேயே இருனு என்ன நீங்க சொல்ல முடியாது. என கூறுகிறார். மறுபடியும் ஒரு பனிப்போரை இதன் மூலம் துவக்கி இருக்கிறார் நித்யா. இதனால் பாலாஜிக்கும் சற்று வருத்தம் ஏற்படுகிறது. எல்லார்கிட்டயும் கெட்ட பேர் வாங்குறா. என நித்யாவிற்காக வருத்தபடுகிறார் பாலாஜி.

இதில் மஹதி வேறு நித்யாவிடம், உங்கள பார்த்தா கஷ்டமா இருக்கு என பரிதாப்பட, உங்கள பாத்தா எனக்கும் அப்படிதான் இருக்கு, என பரஸ்பரம் பரிமாறி கொள்கின்றனர் இருவரும். இப்படியே போன இந்த மும்தாஜ், நித்யா பிரச்சனை பழைய ஜீலி, ஆர்த்தி பிரச்சனை போல ஆகிவிடும் எனவே தோன்றுகிறது இந்த பிரமோவை பார்க்கையில்.