பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'ஓகே கண்மணி'படத்தின் நாயகன் துல்கார் சல்மான் தற்போது தமிழ்,தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வரும் 'சாவித்ரி'வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெமினிகணேசன் கேரக்டரில் நடித்து வருகிறார். 

சாவித்திரியாக முதலில் சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டார் என தகவல் கசிந்தது. பின் நடிகை சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷை ஒப்பந்தந்தம் செய்துள்ளனர். 


இந்த நிலையில் நாயகன் துல்கர் சல்மான் மீண்டும் ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கவுள்ள படத்தில் துல்கார் சல்மான் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ் மற்றும் இந்த படத்திற்கு தீனதயாள் என்பவர் இசையமைக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவல்களை இயக்குனர் கார்த்திக் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.