again big boss celebraties join

கடந்த மூன்று மாதத்திற்கு முன் பிரபல தனியார் தொலைக்காட்சியின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி, பெருவாரியான ரசிகர்களின் ஆதரவோடு மிகவும் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

100 நாட்களை கடந்து வெற்றிகரமாக முடிவடைந்துள்ள இந்த நிகழ்ச்சி குறித்து, இதில் கலந்துக்கொண்ட பிரபலங்கள் அனைவரும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துவரும் நிலையில். பிக் பாஸ் போட்டியாளர்களை கௌரவிக்கும் விதத்தில் பிக் பாஸ் கொண்டாட்டம் என்கிற நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

இதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைத்து போட்டியாளர்களும் கலந்துக்கொண்டுள்ளனர். குறிப்பாக அனைவருடைய மனதையும் கவர்ந்த ஓவியா பங்கேற்றுள்ளார்.

ஆனால் இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பப்படும் என எந்த தகவலும் இது வரை வெளியாகவில்லை. இந்த நிகழ்ச்சி குறித்த புகைப்படங்கள் மட்டுமே தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.