after varmaa movie dhuruv continue the studies

நடிகர் விக்ரம் மகன் துருவ் இயக்குனர் பாலா இயக்கத்தில் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படமான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக் மூலம் அறிமுகமாகிறார்.

தற்போது இந்த படத்திற்க்காக தன்னுடைய உடலை தந்தை விக்ரமின் உதவியோடு தயார்படுத்தி வருகிறார்.

'வர்மா' என பெரியரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் முதல் தொடங்கவுள்ளது. தற்போது வெளிநாட்டில் படித்து வரும் துருவ், 'வர்மா' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் வெளிநாட்டிக்கு சென்று தன்னுடைய படிப்பை தொடர உள்ளதாக விக்ரம் தற்போது தெரிவித்துள்ளார். இதில் இருந்து துருவ் 'வர்மா' படத்தை தொடர்ந்து சிறிது கால இடைவேளைக்கு பின்பு தான் மீண்டும் படங்களில் நடிக்க வருவார் என தெரிகிறது.

'வர்மா' படத்தில் துருவ் நடிக்காமல் இருந்திருந்தால் நானே நடித்திருப்பேன் என்றும் நான் இப்போதும் இளம் ஹீரோக்களுக்கு நிகரானவன் என்றும் நடிகர் விக்ரம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.