பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட்  மும்பை பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பாலிவுட்டில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடித்ததன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானவர் சுஷாந்த்.  மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டது. 

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சிலர் சுஷாந்தின் வளர்ச்சி பிடிக்காமல் அவரது படவாய்ப்புகளை தட்டிப்பறித்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. பாலிவுட்டில் எப்போதுமே வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தான் அதிகம். புதிதாக வருபவர்களை பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் வளரவிடுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துவருகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலிவுட் ரசிகர்கள் ஆலியா பட், சோனம் கபூர், சாரா அலிகான், சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்டோரை சோசியல் மீடியாவில் வறுத்தெடுத்து வருகின்றனர். 

 

இதையும் படிங்க: கொழு கொழுன்னு இருந்த வித்யுலேகா ராமனா இது?... 30 கிலோ வரை எடையை அசால்டாக குறைத்து ஆளே மாறிட்டாரே....!

தனது சோசியல் மீடியா பக்கங்களில் குவிந்த ஆபாச கமெண்ட்களால் நொந்து போன பாலிவுட்டின் முன்னணி நடிகையான சோனம் கபூர் நொந்துபோனார். அதனால் தனது சோசியல் மீடியா பக்கங்களில் உள்ள கமெண்ட் ஆப்ஷன்களை தற்காலிகமாக முடக்கிவிட்டார். அந்த அளவிற்கு சுஷாந்த் ரசிகர்கள பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகள் மீது கடுப்பில் உள்ளனர். இப்போது அந்த லிஸ்டில் சிக்கியிருக்கிறார் பாலிவுட்டின் இளம் நடிகையான ஆலியா பட். 

 

இதையும் படிங்க: நடுரோட்டில் வைத்து நயன்தாராவிற்கு முத்தம் கொடுத்த விக்னேஷ் சிவன்... வைரலாகும் புகைப்படம்...!

'காபி வித் கரண்' என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆலியா பட்டிடம், “சுஷாந்த் சிங் ராஜ்புட், ரன்வீர் சிங், வருண் தவான் ஆகிய மூவரை பற்றியும் ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்என கேட்கப்பட்டது. சிறிது நேரம் யோசித்த ஆலியா பட் சுஷாந்த் சிங் ராஜ்புட் என ஒரு நடிகர் இருக்கிறாரா? எனக்கேட்டிருந்தார். அன்று தொலைகாட்சி நிகழ்ச்சியில் சுஷாந்தைப் பற்றி எதுவும் தெரியாதபடி கிண்டலடித்துவிட்டு அவருடைய மறைவிற்கு பிறகு உருக்கமாக பதிவிட்ட ஆலியாவை சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கண்டபடி கழுவி ஊத்தினர். 

 

இதையும் படிங்க: அஜித்தை ‘தல’ தெறிக்க ஓட விட்ட தளபதி.... ட்விட்டரில் விஜய் தொட்ட புதிய மைல்கல்...!

அதன் எதிரொலியாக ஆலியா பட்டை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வோரின் எண்ணிக்கை அசுர வேகத்தில் குறைந்து வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் ஆலியாவை 13 லட்சத்திற்கும் அதிகமானோர் அன் பாலோ செய்துள்ளனர். அதுமட்டுமல்ல ஆலியா பட் மீது விழுந்துள்ள நெகட்டிவ் இமேஜால் அவரை தனது ‘ஆர்ஆர்ஆர்’ படத்திலிருந்து நீக்கிவிடலாமா? என பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலி யோசித்து வருகிறாராம். சுஷாந்த் தற்கொலை விவகாரத்தால் பாலிவுட் பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து சிக்கலில் மாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.