after super star and ultimate star he is the star i liked says famous music director

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தயாரித்திருக்கும், ஆர்.கே.நகர் திரைப்படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் ரிலீசாகியது. இந்நிகழ்வில் திரைத்துறை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். வைபவ் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, பிரபல காமெடி நடிகர் ப்ரேம் ஜீ இசை அமைத்திருக்கிறார்.

இந்த ட்ரெயிலர் ரிலீஸின் போது கலந்து கொண்ட அனிரூத், இந்த விழாவிற்கு நான் சிறப்பு விருந்தினராக வரவில்லை, ஒரு ரசிகனாக வந்திருக்கிறேன். சமீபத்தில் ”மேயாத மான்” திரைப்படத்தை எனது நண்பர்களுடன் சேர்ந்து பார்த்தேன். அதில் அவரின் காமெடி கலந்த நடிப்பு நன்றாக இருந்தது. அது முதல் நான் நடிகர் வைபவிற்கு ரசிகனாகிவிட்டேன். இந்த திரைப்படத்திற்கு, இசை சுனாமி பிரேம் ஜீ இசை அமைத்திருப்பது மேலும் ஒரு சிறப்பு.

அவர் ஏன் அதிகமாக இது போன்று இசையமைப்பதில்லை? என்பதே என் கேள்வி. அவரும் நானும் எங்கள் மியூசிக் டிராக்குகளை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொண்டு அதை விமர்சிப்பதும் உண்டு. எங்கள் மத்தியில் இதனால் ஒரு நல்ல நட்பு நிலவுகிறது. என தெரிவித்த அனிரூத், வெங்கட் பிரபுவின் சென்னை 28 படம் வந்த போது முதல், அவரை தனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்தார். வெங்கர் பிரபு ஒரு நல்ல மனிதர். என் நண்பர்களுக்கு கூட அவரை தான் சிறந்த எடுத்துக்காட்டாக நான் எப்போதும் கூறி இருக்கிறேன்.

அடுத்ததாக நடிகர் சிவா குறித்து பேசும் போது, நான் சிவாவின் மிகப்பெரிய ரசிகன், தலைவர் ரஜினியின் படங்களுக்கு பிறகு தல அஜீத்தின் படங்களுக்கு பிறகு நான் ரசித்த படங்கள் என்றால் அது சிவாவுடையது தான். அவரது காமெடி டைமிங் எனக்கு ரொம்ப பிடிக்கும் என கூறிய அனிரூத், அங்கிருந்த அனைத்து பிரபலங்களையும் கொஞ்சம் அளவிற்கதிகமாகவே புகழ்ந்திருக்கிறார்.