Asianet News TamilAsianet News Tamil

ஓவரா உதாரு விட்ட வடிவேலு... ஒரு வாரம் கெடு கொடுத்த ஷங்கர்! இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாதா?

After Shankar file complaints against Vadivelu
After Shankar file complaints against Vadivelu
Author
First Published May 25, 2018, 5:41 PM IST


இம்சை அரசன் 24ம் புலிகேசி  படத்தில் நடிப்பதற்கு எனக்கு  ரூ.1 கோடி கொடுத்தால் மட்டுமே நான்  நடிப்பேன் என்று அடம் பிடித்த வடிவேலுக்கு ஒரு வார காலம் அவகாசம் கொடுத்துள்ளது தயாரிப்பாளர் சங்கம். 

சிம்புதேவன் இயக்கத்தில்  வடிவேலு இரண்டு வேடங்களில் நடித்த சரித்திர காமெடிப் படமான இம்சை அரசன் 23ம் புலிகேசி கடந்த 2006ம் ஆண்டு வெளியாகி செம்ம ஹிட் அடித்தது. தற்போது, இப்படத்தின் 2ம் பாகமான “இம்சை அரசன் 24ம் புலிகேசி” படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. இப்படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், “ஃபர்ஸ்ட் லுக்” எல்லாம் வெளியானது.

படபிடிப்பின் போதே சிம்பு தேவனுக்கும் வடிவேலுக்கும் இடையில் கதையில் பிரச்சனை வந்ததால் படம் சில நாட்களில் நின்று போனது. இதனால் வடிவேலு படத்தை விட்டும் வெளியேறினார்.

இப்பிரச்சனையைத் தொடர்ந்து வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. வடிவேலு உடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை.  படத்தில் நடிப்பதற்கு தனக்கு மேலும், ரூ.1 கோடி கொடுத்தால் தான் நடிப்பேன் என்றும் கூறியுள்ளாராம். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர், வடிவேலு படத்தை விட்டு விலகியதால், தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால், வடிவேலு தனக்கு ரூ.9 கோடி கொடுக்க வேண்டும் இல்லையென்றால், எந்தவித நிபந்தனையும் இல்லாமல் படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒரு வார கால அவகாசம் அளித்துள்ளதாம்.

மேலும், ஷங்கருக்கு ரூ.9 கோடி வழங்க வேண்டும் இல்லையென்றால், எந்த நிபந்தனையும் விதிக்காமல் படத்தில் நடிக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்றை செய்யத் தவறினால், வடிவேலுக்கு “ரெட் கார்டு” வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. “ரெட் கார்டு” போட்டால், இந்தப் பிரச்சனை முடியும் வரை வேறு படத்திலும் நடிக்கக் கூடாது.

ஆக வைகைப்புயலுக்கு வகையாக ஆப்படித்துவிட்டார் நம்ம பிரமாண்டம்!

Follow Us:
Download App:
  • android
  • ios