சர்காரைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் 63ஆவது படத்தை மீண்டும் இயக்கும் வாய்ப்பு இளம் இயக்குனர் அட்லி-க்கு கிடைத்துள்ளார். இதுவரை விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்காததை இப்படத்தில் எதிர்பார்க்கலாம் என்று ஆச்சர்யமூட்டியுள்ளார் அட்லி. 

துப்பாக்கி, கத்தி ஆகிய பிளாக் பஸ்டர் திரைப்படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாசுடன், நடிகர் விஜய் இணைந்திருக்கும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது. விஜய்க்கு ஜோடியாக பைரவா திரைப்படத்தில் ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ராதாரவி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 

உதயா, அழகிய தமிழ் மகன், மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்,. அண்மையில் வெளியான இப்படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டடித்துள்ளன. துப்பாக்கி, கத்தியை போலவே இந்தப் படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. மிகப்பெரிய கூட்டணி என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

சர்காரைத் தொடர்ந்து விஜய்யை இயக்கும் வாய்ப்பு மீண்டும் இளம் இயக்குனர் அட்லிக்கே கிடைத்துள்ளது. தெறி படத்தின் மூலம் விஜய்யின் ஸ்டைலை கொஞ்சம் மாற்றிய அட்லி, மெர்சலில் சற்று சொதப்பி விட்டதாகவே கருதப்பட்டது. படம் வசூலான அளவுக்கு வரவேற்பைப் பெற தவறி விட்டதாகவே விமர்சனங்களும் எழுந்தன. 

இந்த நிலையில் விஜயின் 63ஆவது படத்தை அட்லி இயக்கவுள்ளார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய் ரசிகர்களை இதுவரை எதிர்பார்க்காத அனைத்தையும் எதிர்பார்க்கலாம் என்று அட்லி ஓபனாக பேசியுள்ளார். படத்தின் குழுவும் முடிவாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உதயா, அழகிய தமிழ் மகன், மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் தான் இசை அமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அட்லியின் நண்பர்களும் ஆஸ்தான குழுவினரருமான புரொடக்சன் டிசைனர் முத்துராஜ், ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்னு ஆகியோர் தான் இப்படத்திலும் பணியாற்றவுள்ளனர். விஜய் ஜோடி, இதர நடிகர் நடிகைகள் குறித்து தீபாவளி அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது படக்குழு. படப்பிடிப்பும் 2019ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கி விடும் என்று கூறப்படுகிறது. ஸ்கிரிப்ட் பணிகளை முடித்து விட்டு விஜய்க்காக காத்துக் கொண்டு இருக்கிறார் அட்லி. 

ஆக, இந்த ஆண்டு தீபாவளிக்கு விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கிறது