பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வனிதா, தனது பெற்றோரின் திருமண நாளான 27ம் தேதி அன்று பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்து கொண்டார். கொரோனா லாக்டவுன் காரணமாக விஷ்வல் எடிட்டர் பீட்டர் பாலை வீட்டிலேயே கிறிஸ்துவ முறைப்படி எளிமையாக கரம் பிடித்தார். திருமணத்தின் போது வனிதாவும், பீட்டர் பாலும் லிப்லாக் கொடுத்துக்கொண்ட போட்டோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. பலரும் 40 வயதில் வனிதா 3வது திருமணம் செய்து கொண்டதை விமர்சித்தாலும், அவருடைய மகள்கள், ரசிகர்கள் என பெரும்பாலானோர் வனிதாவின் இந்த முடிவுக்கு துணை நின்றனர். 

திருமணமான அடுத்த நாளே வனிதா வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்தது. பீட்டரின் முதல் மனைவி ஹெலன் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். கடந்த 7 ஆண்டுகளாக பீட்டர் பாலும் தானும் பிரிந்து வாழ்த்து வரும் நிலையில், தன்னை முறையாக விவாகரத்து செய்யாமல் பீட்டர் பால், வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக ஹெலன் குற்றச்சாட்டினார்.  இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பீட்டர் பால் தன்னை திருமணம் செய்து கொண்டது ஹெலனுக்கு தெரியும் என்றும், தன்னிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டுவதாகவும் வனிதா பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.  

இதையும் படிங்க: படுக்கையறையில் கணவருக்கு லிப்லாக்... முத்த போட்டோவிற்கு புதுவித விளக்கம் கொடுத்த வனிதா...!

இந்த பஞ்சாயத்து ஒருபுறம் வைரலாகி வரும் நிலையில், நேற்று யூ-டியூப் லைவ் மூலம் ரசிகர்களுக்கு வனிதா விளக்கம் கொடுத்தார். அதில் எதையும் சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளதாக தில்லாக அறிவித்தார். இதனிடையே வனிதா தனது யூ-டியூப் சேனலில் திருமண வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் மோதிரம் மாற்றிய மறுகணமே பீட்டர் பால் வனிதாவின் உதட்டில் பாய்ந்து முத்தமிடும் காட்சிகள் காண்போரை சங்கடத்தில் நெளிய வைக்கிறது. இதோ அந்த வீடியோ....