இந்நிலையில் “கோலமாவு கோகிலா” படத்திற்கு பிறகு முக்கியமான கேரக்டரில் யோகிபாபுவுடன் நடிக்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிடம் கால்ஷூட் கேட்டிருக்கிறார்களாம். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் யோகிபாபுவிற்கு சூப்பர் திருப்பமாக அமைந்த படம் “கோலமாவு கோகிலா”. நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நயனை விரட்டி, விரட்டி காதலிக்கும் சூப்பர் பாயாக அந்தர் செய்திருந்தார் யோகிபாபு. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: சன்னி லியோனுக்கே டப் கொடுக்கும் பிரபல நடிகை... ஓவர் கிளாமர் போட்டோஸை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்...!

யோகிபாபுவிற்கு என்று தனியாக பாட்டு, அதில் அவரு ஆடுன வேற லெவல் ஸ்டெப்ஸ் எல்லாம் தாறுமாறு வைரலானது. இந்த படத்திற்கு பிறகு தான் தனது சொந்த வீட்டு கிரகபிரவேசத்தில் கூட பங்கேற்க முடியாத அளவிற்கு பிசியாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார் யோகிபாபு. அதே அதிர்ஷ்டம் இப்போது இரண்டாவது முறையாக யோகிபாபு வீட்டு காலிங் பெல்லை அடித்துள்ளது. 

சந்தானம், யோகிபாபுவை வைத்து டகால் படத்தை தயாரித்த எஸ்.பி. சவுத்தரி யோகிபாபுவை வைத்து புதுமையான முயற்சியை கையில் எடுத்துள்ளார். அது என்னவென்றால் யோகிபாபு நடிக்க உள்ள அந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் என மூன்று வேலைகளையும் அவர் தான் பார்த்துள்ளாராம். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நடத்தப்படாமல் உள்ளது.

இதையும் படிங்க: கொரோனா அச்சத்தால் பின்வாங்கிய சுகாதார பணியாளர்கள்... தில்லாக களத்தில் இறங்கி கிருமி நாசினி தெளித்த ரோஜா....!

இந்நிலையில் “கோலமாவு கோகிலா” படத்திற்கு பிறகு முக்கியமான கேரக்டரில் யோகிபாபுவுடன் நடிக்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிடம் கால்ஷூட் கேட்டிருக்கிறார்களாம். நயன் மட்டும் ஓ.கே. சொல்லிவிட்டார் என்றால் யோகி பாபு மட்டும் இல்லை ரசிகர்களும் செம்ம குஷியாகிவிடுவார்கள்.