லிங்கா படம் வரை முன்னணி இயக்குநர்களுக்கு மட்டுமே கால்சீட் கொடுத்து வந்த ரஜினி தற்போது டிராக்க்டை மாற்றியுள்ளார். தன்னிடம் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது என்ன என்பதை புரிந்து கொண்டுவிட்டார் ரஜினி என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

அந்த வகையில் அட்டகத்தி, மெட்ராஸ் என்ற இரண்டு படங்களை இயக்கிய ரஞ்சித், மூன்றாவது படத்திலேயே ரஜினியை இயக்கினார். அதையடுத்து இப்போது காலா படத்தையும் இயக்கி வருகிறார்.

கதைப் பிடித்துவிட்டால் ரஜினி யாருக்கும் கால்சீட் தருவார் என்பதை தெரிந்து கொண்டு தற்போது எதார்த்த கதையுடன் ரஜினியை பல இயக்குநர்கள் சந்தித்து வருகின்றனர்.

தனுசுக்கு நெருக்கமான இயக்குனரான வெற்றிமாறன், ரஜினியை சந்தித்து கதை ஒன்றை சொல்லியிருக்க்கிறார். இந்தச் சந்திப்பை தனுஷே உருவாக்கிக் கொடுத்துள்ளார்.

அதன்படி வடசென்னை படத்தை வெற்றிமாறனும், காலா படத்தை ரஜினியும் முடித்தவுடன் இவர்கள் இருவரும் இணைந்து அடுத்த படத்தை தொடங்குவர்.