கொரோனா பிரச்சனை காரணமாக, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் வெளியாக வேண்டிய படங்களே இன்னும் வெளியிடப்படாமல் உள்ளதால்,  இந்த பிரச்சனை அனைத்தும் முடிந்த பின், ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படங்களை,  திரையரங்குகளில் வெளியிடுவது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியாத சூழல் உருவாகி உள்ளது. இதனிடையே ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஓடிடி பிளாட்பார்மில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

இதையும் படிங்க: மீரா மிதுன், யாஷிகாவையே பின்னுக்குத் தள்ளிய இலங்கை அழகி... முன்னழகை காட்டி மிரளவைக்கும் ஹாட் செல்ஃபி...!

அறிமுக இயக்குனர் ஜே.ஜே.பிரிட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'பொன்மகள் வந்தாள்' . இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்  நிறுவனம் தயாரித்துள்ளது. எப்போதும் போல்  இந்த படமும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், ஜோதிகாவை தவிர, இயக்குனர் பாரதி ராஜா, பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன், உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க:  விஸ்வரூபம் எடுக்கும் விஜய் சேதுபதி விவகாரம்... மக்கள் செல்வனை கதறவிடும் இந்து அமைப்புகள்...!

கொரோனா பிரச்சனையால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால்  'பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தின்  தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா ஓடிடி பிளாட் ஃபாமில், இந்த படத்தை வெளியிட வெளியிட முடிவு செய்தார். மேலும்  ரூ.4.5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தை அமேசான் நிறுவனம் 9 கோடி ரூபாய்க்கு வாங்கியதாகவும் கூறப்பட்டது.  இந்நிலையில் வரும் 29 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: உடலோடு ஒட்டி உறவாடும் உடை... அமலா பாலின் கன்றாவி டிரஸை பார்த்து கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்...!

இதனைத் தொடர்ந்து, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள “பெண்குயின்” திரைப்படமும் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாக இருந்த நிலையில் தற்போது இதன் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 19ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என்று தனது ட்விட்டர் பக்க பதிவில் உறுதிப்படுத்தியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகிறது.