after jayam ravi Arya and Jeeva going to act in screen
சங்கமித்ராவில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கும் ஆர்யா, தற்போது தனது நெருங்கிய நண்பரான ஜீவாவுடன் இணைந்து ஒரு படம் நடிக்க இருக்கின்றனர்.
ஆர்யா - ஜீவா இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
சிவா மனசுல சக்தி படத்தில் ஆர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். அதேபோல் பாஸ் என்கின்ற பாஸ்கரன் படத்தில் ஜீவா கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார்,
தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. நான், எமன் படத்தின் இயக்குனர் ஜீவா ஷங்கர் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.
இந்தப் படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
