பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான், புற்று நோயால் போராடி வந்த நிலையில் நேற்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரை தொடர்ந்து, பிரபல பாலிவுட் பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் இன்று காலை திடீர் என உயிரிழந்துள்ளது, பாலிவுட் திரையுலக ரசிகர்களையும், பிரபலங்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நடிகர் ரிஷி கபூர் கடந்த 2018 ஆம் ஆண்டு, மூச்சு திணறல் காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் இவருக்கு, புற்று நோய் இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு நியூ யார்க் சிட்டியில் உள்ள மருத்துவமனையில் ரிஷி கபூரை அனுமதித்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர் இவருடைய குடும்பத்தினர்.

மேலும் செய்திகள்: பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் திடீர் மரணம்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!
 

தொடர் சிச்சைக்கு பின், சற்று உடல் நலம் தேறிய அவர் கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா வந்தடைந்தார். இதை தொடர்ந்து நேற்று முன் தினம் மீண்டும் இவருடைய உடல்நிலை மோசமானது. இதையடுத்து, உடனடியாக மும்பையில் உள்ள எச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்த போதிலும், சிகிச்சை பழநின்று ரிஷி கபூர் ஏப்ரில் 30 இன்று காலை 5 :30 மணியளவில்  உயிரிழந்ததாக அவருடைய குடுபத்தினர் தெரிவித்துள்ளனர். 

பாலிவுட் திரையுலகத்தில் சிறந்த நடிகர்களாக அறியப்பட்ட, ரிஷி கபூர், மற்றும் இர்பான் என இருவரை அடுத்தடுத்த இறந்திருப்பது, பாலிவுட் திரையுலகில் மிக பெரிய இழப்பாகவே பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்: வித்தியாசமான ட்ரெஸ்ஸிங்.. கல்லூரி நாட்களில் இப்படித்தான் இருந்தாரா தளபதி! இதுவரை பார்த்திராத அரிய புகைப்படம்!
 

புற்று நோய் காரணமாக உயிர் நீத்த இந்த இரு பிரபலங்களுக்கும் அணைத்து திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.