இந்தியாவில்  கொரோனா பிரச்சனைக்காக கடந்த மார்ச் மாதம் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அரசு விதவிதமான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. அதில் முக்கியமானது வாழ்வாதாரத்தை இழந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு செல்வதற்காக ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடை பயணம் செய்வது தான். அப்படி நடந்து செல்லும் தொழிலாளர்கள் பலரும் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கும் துயர சம்பவங்களும் அரங்கேறியது. இதையடுத்து வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், சிறப்பு ரயில்கள் மற்றும் பஸ்கள் மூலமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இதையும் படிங்க: சாகும் வரை நடிகை ஸ்ரீதேவி பயந்து நடுங்கிய ஒரே நபர்... ஆனால் தப்பா எதுவும் நடக்கல?

நேற்று முதல் உள்நாட்டு விமான போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் பலரும் தங்களது சொந்த மண்ணிற்கு திரும்பி வருகின்றனர். அப்படித்தான் தனது சொந்த ஊரான கேரளாவிற்கு வந்த பாவனாவும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க: ஆபாச படம் பார்த்த தமன்னா... ஜாலிக்காக நண்பர் வீட்டில் செய்த கேவலமான வேலை... வைரலாகும் வீடியோ...!

தமிழில் சித்திரம் பேசுதடி,  தீபாவளி, ஜெயம் கொண்டான் உள்ளிட்ட படங்களில் மட்டுமல்லாது மலையாளம் தவிர தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கன்னடத்தில் இவர் நடித்த படத்தை தயாரித்த நவீனுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்ததை அடுத்து இருவரும் 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த பாவனா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் வெளியான '96' படத்தின், கன்னட ரீமேக்கில் நடித்தார். தற்போது சிவராஜ் குமாருக்கு ஜோடியாக பஜராங்கி 2 என்ற படத்திலும்,  இன்ஸ்பெக்டர் 2020, கோவிந்தா கோவிந்தா ஆகிய கன்னட படங்களில் நடித்து ஒப்பந்தமாகியுள்ளார். 

இதையும் படிங்க: கேப்டன் மகன்னா சும்மாவா?... 30 கிலோ வரை எடையை அசால்ட்டாக குறைத்து ஸ்மார்ட் லுக்கிற்கு மாறிய புகைப்படம்...!

இந்நிலையில் கொரோனா பீதி காரணமாக பெங்களூருவில் இருந்து கணவர் நவீனுடன் காரில் வந்த பாவனா, அங்கிருந்து சகோதரர் உடன் திருச்சூர் சென்றுள்ளார். இதையடுத்து பாவனாவிற்கு அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அவருக்கு எவ்வித அறிகுறிகள் இல்லாத போதும் 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும் படி  அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து நடிகை பாவனாவும் தனது சொந்த வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.