இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, இந்தி திரையுலகின் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மா தம்பதிக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதை ரகசியமாக வைத்திருந்தனர்.அதன் பின்னர் தனது மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக விராட் கோலி பதிவிட்ட ட்வீட் 2020ம் ஆண்டில் அதிகம் லைக் செய்யப்பட்ட ட்வீட் என்ற சாதனையை படைக்கும் அளவிற்கு அனைவரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நிறைமாத வயிறுடன் பிரபல மேக்ஸினுக்காக அனுஷ்கா சர்மா நடத்திய போட்டோ ஷூட் உலக அளவில் பிரபலமானது. மார்டன் உடையில் சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்திருந்தார் அனுஷ்கா சர்மா. இந்த தம்பதி 2021 ஜனவரி 11-ஆம் தேதி முதல் குழந்தைக்கு பெற்றோரானார்கள். 

குழந்தை பிறந்த விஷயத்தை சோசியல் மீடியாவில் அறிவித்த விராட் கோலி, அதோடு  தங்கள் மகள் தொடர்பான எந்தவொரு விஷயத்தையும் பகிர வேண்டாம் என ஊடகங்களை கேட்டுக்கொண்டனர். அதோடு தங்களது தனிப்பட்ட வாழ்வை மதிக்கும்படியும் ஊடகங்களிடம் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் குழந்தை பிறந்த பிறகு முதன் முறையாக அனுஷ்கா சர்மாவும், விராட் கோலியும் பந்த்ராவுக்கு வந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.