உச்ச நட்சத்திரங்களின் ஹிட் படங்களை நவீன தொழில்நுட்பத்துடன் ரீ-ரிலீஸ் செய்யும் ட்ரெண்ட் தற்போது உருவாகியுள்ளது. அதுபோல தல அஜித் 24 வருடங்களுக்கு முன்பு காமெடியில் கலக்கிய "மைனர் மாப்பிள்ளை" திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரைக்கு வர உள்ளது. அந்த படத்தில் அஜித் குணச்சித்திர கதாபாத்திரம் போன்று நடித்திருந்தாலும், தற்போது அஜித்திற்கு உள்ள ரசிகர்கள் பட்டாளம் மற்றும் மார்க்கெட் மதிப்பை கணக்கில் கொண்டு படத்தை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ள்தாக தெரிகிறது.

அஜித், ரஞ்சித்,  வடிவேலு, ஸ்ரீவித்யா உள்ளிட்டோர் நடிப்பில் 1995ம் ஆண்டு வெளிவந்த படம் "மைனர் மாப்பிள்ளை". விக்டரி மூவீஸ் சார்பில் ராகவா தயாரித்த இந்த படத்திற்கு சாய்வண்ணன் இசையமைத்திருந்தார். முழுக்க, முழுக்க நகைச்சுவையான படமான இது டபுள் ஹீரோ கான்செப்டில் படமாக்கப்பட்டது. இப்படத்தை இயக்கிய குகநாதன், டிஜிட்டல் மற்றும் கிராபிக்ஸ் பணிகளை செய்து அப்படத்தின் மீண்டும் திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளார்.  

சிவாஜி கணேசனின் "வசந்த மாளிகை", "கர்ணன்" ஆகிய படங்களும், சூப்பர் ஸ்டாரின் "பாட்ஷா" திரைப்படமும் புது தொழில்நுட்பத்தில் மெரூகேற்றப்பட்ட ரிலீஸ் செய்யப்படுகிறது. பல ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையிடப்பட்ட அப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆனந்த கூத்தாடினர். தியேட்டரிலும் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக "வசந்த மாளிகை" படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த தடபுடலான வரவேற்பு சோசியல் மீடியாவை அதிரவைத்தது. தற்போது அந்த வரிசையில் தல அஜித் இணைந்துள்ளார். அஜித் படம் எப்போது ரிலீஸ் ஆனாலும் தல ரசிகர்கள் ஒரு கலக்கு கலக்குவார்கள் என்பதால், "மைனர் மாப்பிள்ளை"  ரிலீஸிற்காக காத்திருக்கின்றனர்.