Asianet News TamilAsianet News Tamil

பத்து ஆண்டுக்கு பின் மீண்டும் ஜோடி சேர்ந்த நகுல் மற்றும் சுனைனா!

காதலில் விழுந்தேன் வெளியாகி சுமார் 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் வெற்றி ஜோடிகளான நகுல் மற்றும் சுனைனா, தற்போது   எரியும் கண்ணாடி, என்ற படத்தில் நடிக்கின்றனர்.

after 10 years back join  sunaina  and nakul
Author
Chennai, First Published Sep 27, 2018, 7:04 PM IST

காதலில் விழுந்தேன் வெளியாகி சுமார் 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் வெற்றி ஜோடிகளான நகுல் மற்றும் சுனைனா, தற்போது   எரியும் கண்ணாடி, என்ற படத்தில் நடிக்கின்றனர்.

இளைஞர்களின் நாடி துடிப்பான யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பாடலாசிரியராக பணியாற்றுகிறார்.

இப்படத்தில் மனிஷா கொய்ராலா, முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும்  சுரேஷ் மேனன் , அபர்ணா கோபிநாத்,ரேவதி ஆகியோர் நடிக்கின்றனர்.இப்படத்தினை இயக்குநர் சச்சின் தேவ் என்பவர் இயக்க உள்ளார்.

பத்து ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இவர்கள் இணைந்து நடிக்க உள்ளதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios