தமிழில் 'நாடோடிகள்' படத்தில் நடித்த நடிகை சாந்தினியை, திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி கருக்கலைப்பு செய்ததாக நடிகை சாந்தினி கடந்த மாதம் கொடுத்த புகாரை அடுத்து தலைமறைவாக இருந்து வந்த முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் அதிரடியாக செய்துசெய்யப்பட்ட நிலையில், விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் தன்னை,திருமணம் செய்து கொள்வதாகக் கூறித் ஏமாற்றியதாகவும், புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என, நடிகை சாந்தினி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் போது மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் எனவும் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மணிகண்டனின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்பதால் தலைமறைவானார்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டனை பிடிப்பதற்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு மதுரை சென்று அவரை தேடினர். மற்றொரு தனிப்படையினர் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று காலை பெங்களூருவில் அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினார். இந்நிலையில் சுமார் 2 மணிநேர விசாரணைக்கு பின், முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.