நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடிப்பில், இன்னும் ஒரு படம் கூட வெளியாகாத நிலையில், பெரிய நடிகர்களுக்கு கொடுப்பது போன்ற முக்கியத்துவத்தை படக்குழு இவருக்கும் கொடுத்துள்ளது.

அதாவது செப்டம்பர் 23 ஆம் தேதி, துருவின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், இவருடைய பிறந்த நாள் அன்று படக்குழுவினர், இவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, தற்போது துருவ் நடித்து முடித்துள்ள, 'ஆதித்ய வர்மா' படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலை வெளியிட, படக்குழு முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்த அதிகார பூர்வ அறிவிப்பை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். துருவ் தற்போது நடித்துள்ள 'ஆதித்ய வர்மா' படம், தெலுங்கில் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற, 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ளது. 

இதில், துருவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடித்துள்ளார். இந்த படத்தை, கிரிசாயா என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். E4 என்டர்டெயன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளதால், தமிழிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வரும் நவம்பர் மாதம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.