இதில், எய்ட்ஸ் நோயாளியாக நடித்து முதல் படத்திலேயே திரையுலகம் மட்டுமல்லாமல், ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார் அதிதி பாலன். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. 

இதனையடுத்து, அதிதிக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த போதிலும், அவரோ கதை கேட்டுவிட்டு பிடிக்கவில்லை என்று பல படங்களை ஒதுக்கித் தள்ளினார்.  அத்துடன், கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், குடும்ப பெண்ணாக மட்டுமே நடிப்பேன் என்று கண்டிஷன் போட்டதாலும் அவரை அணுகவே இயக்குநர்கள் அஞ்சத் தொடங்கினார். 

இதனால், 'அருவி' படம் வெளியாகி 2 வருடங்களாகியும் பட வாய்ப்புகள் இன்றி முடங்கி கிடந்த அதிதி பாலன், சமீபத்தில் மஞ்சள் நிற புடைவையில் மிகவும் கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்தி, அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பரவவிட்டு அதிரவைத்தார்.

இறுதியாக தமிழில் காத்திருந்து காத்திருந்து படங்கள் கிடைக்காததால் மலையாள கரையோரம் ஒதுங்க முடிவெடுத்த அதிதி பாலனுக்கு, மலையாள திரையுலகம் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்துள்ளது. யெஸ், தற்போது மலையாளத்தில் புதிய படங்களில் கமிட்டாகியுள்ளாராம் அதிதி.

அதில் ஒரு படம்தான் படவெடட்டு. இந்தப் படத்தில் பிரேமம் புகழ் நிவின் பாலி ஹீரோவா நடிக்க, அவருக்கு ஜோடியாக அதிதி நடிக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் லிஜூ கிருஷ்ணா என்பவர் இயக்க, நடிகர் சன்னி வெய்ன் தயாரிக்கிறார். படவெட்டு படத்திற்கு '96' புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். 

மலையாளத்தில் அதிதி பாலன் அறிமுகமாகும் இந்தப் படத்தின் ஷுட்டிங், படபூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து, முன்னணி நடிகர் குஞ்சாக்கோ போபனுக்கு ஜோடியாக மற்றொரு மலையாள படத்திலும் நடிக்கவிருக்கிறாராம் அதிதி பாலன். 

இப்படி அடுத்தடுத்து மலையாளத்தில் பட வாய்ப்புகள் குவிந்து வருவதால், "இனி எண்ட ஸ்டேட் கேரளா! எண்ட மொழி மலையாளம்...!" என்ற ரேஞ்சுக்கு ஒரேயடியாக அதிதி பாலன் மலையாள பக்கம் ஒதுங்கிவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.