Asianet News TamilAsianet News Tamil

அட ராமா... இது என்ன பிரபாஸின் 'ஆதிபுருஷ்' படத்திற்கு தமிழகத்தில் வந்த சோதனை! காத்து வாங்கும் திரையரங்குகள்!

நடிகர் பிரபாஸ் நடிப்பில், உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ள 'அதிபுருஷ்' திரைப்படம் தமிழகத்தில் வரவேற்பை பெறாதது, திரையரங்க உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 

Adhipurs movie which was not well received by the fans of Tamil Nadu
Author
First Published Jun 16, 2023, 11:33 PM IST

'பாகுபலி' திரைப்படத்தின் மூலம், உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியவர் பிரபாஸ். இவரின் பாகுபலி திரைப்படம், தமிழகத்தில் ஒரு மாதத்திற்கு மேல் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய நிலையில்... இன்று வெளியான 'ஆதிபுருஷ்' திரைப்படம் தமிழகத்தில் வரவேற்பை பெறாதது, திரையரங்கு உரிமையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயணத்தை மையமாக வைத்து, சுமார் 600 கோடி பட்ஜெட்டில் பிரபாஸ் நடிப்பில் 3d அனிமேஷன் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. 'ஆதிபுருஷ்' படத்தில் ராமராக பிரபாஸ் நடித்துள்ள நிலையில், சீதாவாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். ராவணனாக பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலிகான் நடித்துள்ளார்.

Adhipurs movie which was not well received by the fans of Tamil Nadu

தமிழக அரசு பேருந்து என்றாலே கரும்புகை.. சக்கரம் கழண்டு ஓடுவது.. பழுதடைவது.. புலம்பும் அன்புமணி ராமதாஸ்.!

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் இன்று, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகளில் வெளியானது. மேலும் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் இப்படத்திற்கு அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டன. ஆந்திராவில் இப்படம் பிரபாஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் VFX  காட்சிகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம், என்பதே பெரும்பாலான ரசிகர்களின் பொதுவான கருத்தாக உள்ளது. மற்றபடி இதை ஒரு படமாக பார்க்கும் போது இசை, பாடல்கள், படத்தைக் கொண்டு சென்ற விதம் என அனைத்துமே திருப்திகரமாக இருப்பதாக பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

Adhipurs movie which was not well received by the fans of Tamil Nadu

ஸ்ரீதேவி முதல் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் வரை... பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொண்டு அழகான 15 ஹீரோயின்கள்!

அதே நேரம் சில ரசிகர்கள், மிகப்பெரிய ராமாயண கதையை... மூன்று மணி நேரத்திற்குள் சுருக்கி சொல்வதால் இப்படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்பது போன்ற நெகடிவ் விமர்சனங்களும் தெரிவித்து வருகிறார்கள்.  ஆந்திராவைச் சேர்ந்த ஒரு ரசிகர் வெளிப்படையாக இதனை கூறிய நிலையில், அவரை சில பிரபாஸின் ரசிகர்கள் தாக்கிய வீடியோ ஒன்றும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Adhipurs movie which was not well received by the fans of Tamil Nadu

பீர் பாட்டிலால் கையை அறுத்துக் கொண்டு பிரபாஸின் 'ஆதிபுருஷ்' போஸ்டருக்கு அபிஷேகம் செய்த ரசிகர்! வீடியோ

இப்படி மிக்ஸ்டு ரிவியூஸை பெற்று வரும் 'ஆதிபுருஷ்' திரைப்படம் தமிழகத்தில் முதல் நாளிலேயே... வரவேற்பு குறைந்து, திரையரங்கில் காற்று வாங்குவது தான், திரையரங்கு உரிமையாளர்களை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 20... 30... ஆன் லைன் புக்கிங் மட்டுமே செய்யப்படுகிறது. எனினும்  அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால், 'அதிபுருஷ்' படத்திற்கு தமிழகத்தில் வரவேற்பு அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow Us:
Download App:
  • android
  • ios