பொங்கலையொட்டி கடந்த 10 ஆம் தேதி நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் படம் ரீலீஸ் ஆனது. ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்துக்கும் விஸ்வாசம் படத்துக்கும் இடையே நேரடி போட்டி இருந்து வந்தது.

ஆனால் வசூலில் பேட்ட படத்தை பின்னுக்குத் தள்ளி விஸ்வாசம் பெரும் சாதனை படைத்தது. அஜித் இதுவரை நடித்த திரைப்படங்கிளிலேயேஇந்தப் படம் அதிக வசூலைப் பெற்றுத் தந்தது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலைய்ல விஸ்வாசம் படத்தில் இடம்பெற்றுள்ள அடிச்சுத்தூக்கு பாடல் கடந்த 23-ம் தேதி யூடியூபில் வெளியானது. வெளியானது முதலே பார்வையாளர்கள், லைக்ஸ் என அதிகரித்துக்கொண்டே வருகிறது.

 இந்நிலையில் பாடல் வெளியான 5 நாட்களில் 4.8 மில்லியன் பார்வையாளர்களையும் 3 லட்சத்து 68 ஆயிரம் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. இதன்மூலம் சர்க்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சிம்டாங்காரன் பாடல் பெற்ற லைக்ஸ்களைத் தாண்டியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி வெளியான சிம்டாங்காரன் பாடல் 33 மில்லியன் பார்வையாளர்களையும் 3 லட்சத்து 64 ஆயிரம் லைக்ஸ்களையும் தற்போது வரை பெற்றுள்ளது.