சிவா இயக்கியுள்ள விஸ்வாசம் படம் முழுக்க முழுக்க கிராம பின்னணியில் உருவாகியுள்ளது. படம் அடுத்த வருடம் பேட்ட படத்திற்கு போட்டியாக பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. ரிலீஸை உறுதி செய்ததை தவிர எந்த அப்டேட்டும் கிடைக்காததால் தல ரசிகர்கள் செம கடுப்பில் இருந்தனர்.  

இந்தப் படத்தின் ஆடியோ உரிமையை லஹரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.  

இந்நிலையில் அப்டேட் சரியாக 7 மணிக்கு அட்ச்சிதூக்கு  பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அறிவித்தபடி பாடல் வெளியிடப்பட்டுள்ளது. "டானே டர்ராவான்  தௌலத்து கிர்ராவான் வந்தான்டா மதுரக்காரன்" என மீசையை முறுக்கிக்கொண்டு கெத்தாக தோன்றும் காட்சிகள் மட்டும் இந்த பாடலில் இடம்பிடித்துள்ளது.

சரியாக 7 மணிக்கு வெளியான பாடல் வைரலாகி வருகிறது. இந்த பாடல் வெளியான 5 நிமிடங்களில் இந்த பாடல் 5000 கமெண்டுகளை பெற்றது. மேலும் 10 நிமிடத்தில் 1 லட்சம் லைக்குகள் மற்றும் 10 ஆயிரத்திற்கும் அதிகம் dislikes பெற்றுள்ளது. ஒருமணி நேரம் முடிவில்,  286,339 லைக்ஸ், 38,728 dislikes  பெற்றுள்ளது.