சிவா இயக்கத்தில்  தல அஜித் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள  இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மதுரையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு டி இமான் இசையமைத்துள்ளார். இது அவர் பணியாற்றும் நூறாவது படமாகும். ஏற்கெனவே இமானின் வெற்றிப் பாடல்கள் மதுரையைக் களமாகக் கொண்டு வெளியாகியுள்ளன. அந்த வகையில் ஆட்டம் போட வைக்கும்படியாக ‘அடிச்சு தூக்கு’ பாடல் உருவாகியுள்ளது.

“அங்காளி பங்காளி வா இனி..,ஆட்டம்தான் எப்போதும் அடி அடி அடி...மங்காத்தா கட்டை போல, இந்த வட்டாரம் நம்ம கையில் புடி புடி புடி” என அஜித்திற்கான இந்த ஒப்பனிங் பாடலை டி.இமானே பாடியுள்ளார்.

“நான் நினைச்சது எல்லாமே ஏன் நடக்குது தன்னாலே, மேல் இருக்கிற மேகம் ஓயாம பூ தூவுது எம் மேல, அட கருவா நீ பொறக்கிறே இறந்தா டண்டணக்கறே, மத்தியில கொஞ்சநாளு செம சீனா சிதற வைக்கணும், பாத்தா பதற வைக்கணும் அப்பதான்டா நீ என் ஆளு” என பாடல் வரிகளை விவேகா எழுதியுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#AdchiThooku hits 2M views in 1 hour. Thank you for the overwhelming response. #Viswasam

A post shared by Sathya Jyothi Films (@sathyajyothifilms) on Dec 10, 2018 at 6:38am PST

பொங்கலுக்கு வெளியாகவுள்ள படங்களில் ரஜினி நடிக்கும் பேட்ட படத்தின் புரொமோஷன்கள் அதிகளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. போஸ்டரில் ஆரம்பித்து இசை வெளியீடு வரை ஆடி அடங்கியுள்ள நிலையில், பிள்ளையார் சுழியாக சைலண்ட்டாக ஒரே ஒரு ட்வீட் போட்டு போட்டு களமிறங்கியிருக்கிறது. 

படத்தின் புரொமோஷன் பெரியளவில் இல்லையே என விவாதங்கள் எழுந்த சொல்லப்பட்ட நிலையில் ரசிகர்களை மட்டுமே நம்பி  ‘அடிச்சு தூக்கு’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம்.  பாடல் வெளியாகி சோசியல் மீடியாவை வாதம் செய்து வருகிறது.  மேலும், பாடல் வெளியான 1 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.