நடிகர் சிம்பு நடித்த 'இது நம்ப ஆளு' படத்தில், இரண்டாவது நாயகியாக நடித்தவர், அடர் ஷர்மா. இந்தியில் அறிமுகமான, இவர் தற்போது தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

படவாய்ப்பை பெறுவதற்கு, அவவ்போது வித்தியாசமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

சில சமயங்களில் முகம் சுழிக்கும் அளவிற்கு, புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது வித்தியாசமாக, இவர் தலைகீழாக, சுவற்றில் கை வைத்து கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ள வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.