இஸ்ரோவின் தலைவரும் தமிழருமான சிவன், தலைமையிலான இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்ணுக்கு அனுப்பிய சந்திராயன் 2, விண்கலம் இன்று அதிகாலை நிலவை நெருங்கிய கடைசி நிமிடத்தில் திடீர் என தகவல் துண்டிக்கப்பட்டது. 

இருப்பினும் வெற்றி கனியை தொட முயன்ற இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, பலர் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வந்தனர். 

அதிலும் நம் நாட்டு பிரதமர் மோடி,  இஸ்ரோ தலைவர் சிவன் எடுத்த மிகப்பெரிய முயற்சியை பாராட்டி, அவரை தன்னுடைய தோளில் சாய்த்து ஆறுதல் கூறியது, பார்பவர்களையே கண் கலங்க செய்யும் சம்பமாவாக இருந்தது. 

இந்நிலையில் தொடர்ந்து பல பிரபலங்கள் தனங்களுடைய வாழ்த்துக்களை இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தெரிவித்து வரும் நிலையில், பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, விளையாடிய பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் சிவன் அவர்களை பாராட்டி ட்விட் ஒன்றை போட்டுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளது... 

"இஸ்ரோவை நினைத்து நான் மிகவும் பெருமை கொள்கிறேன். உலகில் உள்ள மற்ற நாட்டு விஞ்ஞானிகளை விட இந்திய விஞ்ஞானிகள் உயர்ந்தவர்கள் என்பது நிரூபணம் ஆகிவிட்டது. இந்தியாவின் பெருமையை உலகிற்கே எடுத்துக்காட்டிய ஒரு விவசாயி மகன். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்! என்று பதிவு செய்துள்ளார். இவரின் இந்த