பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை, நடைபெறாத ஒரு நிகழ்வு இன்று அரங்கேற உள்ளது. இத்தனை நாள் வாரம் ஒரு நபர் மட்டுமே வெளியேறுவார் ஆனால் பிக்பாஸ் நிறைவு பெற இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால், இந்த வாரம் இரண்டு போட்டியாளர்களை வெளியேற்ற நிகழ்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இத்தனை ப்ரோமோ மூலம் கமல்ஹாசனும் உறுதி செய்துள்ளார். எனினும் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியை நேரில் சென்று பாத்தவர்கள் கூறியுள்ளது மூலம் இன்று பாலாஜி மற்றும் யாஷிகா ஆகியோர் வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இன்று போட்டியாளர்கள் அனைவரும், அவர்களுடைய வீட்டில் உள்ளவர்களிடம் பேசுகிறார்கள். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், முதலில் ரிதிவிக்காவின் அம்மா பேசுகிறார். இதனால் மிகவும் சந்தோஷமான ரித்விகா... தன்னுடைய தாயிடம் முதலில் எடுத்தவுடன் தான் ஆசையாக வளர்த்து வரும் நான்கு மீன்களைப்பற்றி கேட்கிறார். 

இவரை தொடர்ந்து விஜி அவருடைய கணவரிடம் மிகவும் உட்சாகமாக பேசுகிறார். அவரை மிகவும் மிஸ் செய்வதாகவும், பல முத்தங்கள் கொடுப்பதாகவும் கூறுகிறார். இதற்கு... கமல், இது ஒரு U / A நிகழ்ச்சி என்றும், குழந்தைகள் எல்லாம் இங்கிருப்பதாக தெரிவிக்கிறார்.