actress vijayalakshmi baby birth

'சென்னை 28' , படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் அகத்தியனின் மகள் விஜயலக்ஷ்மி.

இந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த சில படங்கள் சரி வர ஓடாததால், தான் காதலித்த பெரோஸ் மொஹம்மத் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

இந்நிலையில், சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த 'சென்னை 28' படத்தின் இரண்டாம் பாகம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தும் இவர் கர்பமாக இருந்ததால் நடிக்க முடியாமல் போனது.

இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், விஜயலக்ஷ்மிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த தகவலை அவருடைய கணவர் பெரோஸ் தெரிவித்துள்ளார்.