'சென்னை 28 ' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை விஜய லட்சுமி அகத்தியன். இந்த படத்தை தொடர்ந்து வெளியான 'அஞ்சாதே' திரைப்படம் இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிக பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.

இந்த படத்தை தொடர்ந்து, சரோஜா, அதே நேரம் அதே இடம், உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால் இவரால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை. இதனால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். பின் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, 'நாயகி' என்கிற சீரியலிலும் நடித்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் வயல் கார்டு சுற்று மூலம் உள்ளே நுழைந்தார். மக்கள் இவருக்கு ஆதரவு கொடுத்த போதிலும், பாதியில் உள்ளே வந்ததால், இவருக்கு வெற்றிபெறும் வாய்ப்பு குறைவாகவே இருந்தது. இறுதி வரை வந்தும், குறைவான வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்பட்டார். 

இந்நிலையில் இவர் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி, அதன் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் தன்னுடைய அழகால் பார்பவர்களையே அசர வைத்துள்ளார் நடிகை விஜயலட்சுமி.