கடந்த 2006 ஆம் ஆண்டு, 'மதராசி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை வேதிகா. ' முனி',' காளை', 'காஞ்சனா', உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தும் இவரால் கோலிவுட் திரையுலகில்,  நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை.

பின், கன்னடம், தெலுங்கு, திரையுலகிற்கு சென்ற இவர், தற்போது அங்கு முன்னணி நடிகையாக இருக்கிறார். கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு 'காவிய தலைவன்' திரைப்படம் வெளியானது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் விரைவில் இரண்டு படங்கள் வெளியாக உள்ளது. மேலும் பாலிவுட் திரையுலகிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோவை பார்த்து ரசிகர்கள் செம்ம ஷாக் ஆகி உள்ளனர். 

இந்த வீடியோவில், வெள்ளை சிங்கத்துடன் இவர் இருப்பது போலவும், மிக நீளமான மலை பாம்புடன் இவர் கொஞ்சி விளையாடுவது போன்றும் வீடியோ வெளியிட்டுள்ளார். இதை பார்த்து பலர் வேதிகாவிற்கு இவ்வளவு தைரியமா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அந்த வீடியோ இதோ

 

View this post on Instagram

Petting a 🦁

A post shared by Vedhika (@vedhika4u) on Dec 26, 2018 at 6:21am PST