நடிகர் சங்க பொது செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர், திரைப்படங்கள் நடிப்பது என விஷால் எப்போதும் பிஸியாக இருந்தாலும் தற்போது சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளர்கஞ் களமிறங்கி உள்ளார்.
நடிகர் சங்க பொது செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர், திரைப்படங்கள் நடிப்பது என விஷால் எப்போதும் பிஸியாக இருந்தாலும் தற்போது சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளர்கஞ் களமிறங்கி உள்ளார்.
தெலுங்கில், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சி “மேது சைத்தம்“. இந்த நிகழ்ச்சியில், சினிமா பிரபலங்கள் தங்களுடைய ஆடம்பர வாழ்கையை விட்டு விலகி ஒரு நாள் முழுதும் சாதரண மனிதனாக, சாமானிய மனிதனாக மாறி கூறி வேலை செய்யவேண்டும். அதில் கிடைக்கும் பணம் கஷ்டப்படும் ஒருவருக்கோ, அல்லது சமூக பணிகளுக்கு அவர்கள் கொடுக்கலாம்.
பாகுபலி படத்தின் வில்லன் ராணா ஒரு நாள் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வாழ்வார்கள். நடிகை அனுஷ்கா பெட்ரோல் போடும் இடத்தில் வேலை செய்தார். இதனால் இந்த நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
தற்போது இதே போன்று ஒரு நிகழ்ச்சியை விஷால் தொகுத்து வழங்கி வருகிறார். முதல் நிகழ்ச்சியில் இவருடன் நடிகர் கார்த்தி கலந்து கொண்டு, நடக்க முடியாத ஒரு சிறுவனின் அறுவை சிகிச்சை செய்ய உதவினார்.
இவரை தொடர்ந்து, விஷால் பல வருடங்களாக காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது வந்த நடிகை வரலட்சுமி சரத்குமார், மற்றொரு பெரிய தொலைக்காட்சியில் தொகுப்பாளர்க களமிறங்க உள்ளார்.
'உன்னை அறிந்தால்' என்கிற பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிக்கு ஞாயிற்று கிழமை தோறும் 12 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதன் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர், தொகுப்பாளராக களமிறங்க உள்ளதால், தன்னுடைய மகளுக்கு நடிகர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

