பிரபல நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாரின் மூத்த மகள் நடிகை வரலட்சுமி, சிம்பு நடித்து வெளிவந்த 'போடா போடி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து சில காலம் திரைப்படங்களில் நடிக்க வாய்புகள் இல்லை என்றாலும் தற்போது கதாநாயகியாக நடிக்க விட்டாலும் நல்ல கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

கசந்த காதல்:

இவர் நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷாலை காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப் பட்ட நிலையில்... தற்போது இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை முறித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது வரை இவர்கள் இருவருமே தங்களுடைய காதல் குறித்து எந்த ஒரு தகவலையும் கூறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக சேவை:

சமீப காலமாக நடிப்பை தாண்டி சமூக அக்கறை கொண்ட செயல்களில் ஆர்வம் காட்டி வரும் வரலட்சுமி. சக்தி என்கிற அமைப்பை துவங்கி சினிமா துறையில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதை தடுக்கும் பொருட்டு இந்த அமைப்பை நடத்தி வருகிறார். 

அரசியல் களத்தில் இறங்குகிறாரா?

இந்நிலையில் வரலட்சுமி மகளிர் தினத்தை முன்னிட்டு ரத்த தானம், ஊனமுற்ற மகளிருக்கு மூன்று சர்க்கர வாகனம், நிதி உதவி, புடவைகள், உள்ளிட்ட பொருட்களை கொடுத்துள்ளார். 

வரலட்மியின் இந்த செயல் பலருக்கும் இவர் அரசியலில் நுழைய அச்சாரம் போடுகிறாரா என்கிற சந்தேகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.   

இதன் புகைப்படத் தொகுப்பு: