பொண்டாட்டின்னா பொஸஸிவ்வா இல்லாம புருஷனை ஊர் மேய விடுவாளா.?  என நடிகை வனிதா  பிக்பாஸ் பிரபலம் தர்ஷனை தாறுமாறாக தாக்கியுள்ளார் . பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்டது ,  ஆனாலும் அதில் கலந்து கொண்டவர்களின்  காதல் கல்யாண சர்ச்சைகள்  இன்னும் ஓய்ந்தபாடில்லை. நடிகை  சனம் ஷெட்டி ,  தர்ஷன் காதல் விவகாரம்தான் இப்போதைக்கு  ஹாட் டாபிக் .  காரணம் இவர்களுக்கு இடையேயான நீண்டநாள் உறவு அதில் ஏற்பட்ட திடீர் விரிசல் தற்போது பூதாகரமாகி  ஒருவர் மீது ஒருவர் போலீசீல் புகார் கொடுக்கும் அளவிற்கு வந்துள்ளது . 

தன்னை காதலித்து திருமணத்திற்கு நிச்சயதார்த்தம் செய்த நிலையில்  தர்ஷன் ஏமாற்றிவிட்டதாக சனம் ஷெட்டி கதறுகிறார்,  தன்னை காதலிப்பதாக கூறிய  சனம் ஷெட்டி தன் முன்னாள் காதலனுடன் ஊர் சிற்றி உல்லாசமாக இருக்கிறார் பாருங்கள் என தர்ஷன் பதிலுக்கு திகல் கிளப்புகிறார்.  இருவரும் மாறிமாறி குற்றம்சாட்டி வரும் நிலையில் சனத்துக்கு  ஆதரவாக பிக்பாஸ் பிரபலங்கள் களத்தில் இறங்கி உள்ளனர் .  குறிப்பாக  சாண்டியின் முன்னாள் மனைவி காஜல் சனத்திற்கு  ஆதரவாக பேசி வருகிறார் .   இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேட்டி கொடுத்துள்ள நடிகை வனிதா ,   தர்ஷன் எனக்கு பிரதர் மாதிரி...  அவனை நான்  திட்டி இருக்கேன் , இப்பவும் திட்டுவேன் ,  இந்தப் பிரச்சினைக்காகத்தான் நான் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே படித்து படித்து சொன்னேன்.  அவங்கவங்க வேலையை அவங்கவங்க பார்த்தா பிரச்சனை இல்லை... அப்படி இருந்தால் சாக்ஷசிக்கு இப்படி நடந்திருக்காது 

கவின் லாஸ்லியா பிரச்சினை ஓடியிருக்காது... கணவர் வேலைக்குப் போகிறார் என பெண்கள் நம்பி அனுப்புகிறோம் ,  அந்த பொறுப்புணர்ச்சியுடன் தர்ஷன் இருந்திருக்கணும் .  நானும் கூட என் கணவர் ராபர்ட்டுக்காக 1 கோடி செலவு பண்ணி ஒரு படம்  எடுத்து வெளியிட்டேன் .  அதையேதான் சனம் தர்ஷனுக்காக செஞ்சிருக்கா,  அதனால் சனத்தின்  மேல் எனக்கு மரியாதை  இருக்கு .  ஒரு  பொண்ணு  மேல அப்படியே தப்பு இருந்தாலும்கூட  கேமரா முன்னாடி அந்த பொண்ண பத்தி தப்பா பேசக்கூடாது.  சினிமா நடிகை... அவள் பிகினி போட்டு இருக்கா... இதெல்லாம் முன்னாடியே தெரியாதா..??  சனத்தை  பார்த்தா பாவமா இருக்கு தர்ஷனுக்கு  கல்யாணம்னா என்னன்ணூ தெரியுமா.?  சனம் பொஸஸிவ்வா  இருக்கான்னு தர்ஷன் சொல்லுறான்,  பொண்டாட்டி பொஸஸிவ்வ  இல்லாம புருஷன ஊர் மேய விடுவாளா..?  என்கிட்ட இப்படி எல்லாம் சொன்னா செருப்பால அடிப்பேன் என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.