ஒரு வாரத்திற்கு நான்கு படங்களுக்கு குறைவில்லாமல் வெளியாகி வருவதால், படத்தை இயக்கி முடித்து, அதனை ரிலீஸ் செய்வதற்குள் போதும் போதும் என ஆகி விடுகிறது. அதிலும் அந்த படத்திற்கு சாட்டிலைட் உரிமையை பெறுவது என்பது, அவ்வளவு எளிதல்ல என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.

இந்நிலையில், நடிகர் நிதின் சத்யா தயாரிப்பில், வைபவ் - வாணி போஜன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'லாக்கப்'. சன் டிவியில், 'தெய்வமகள் சீரியலில்' அறிமுகமாகி, இந்த படத்தில் கதாநாயகியாக மாறி இருக்கிறார் வாணி போஜன்.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், விரைவில் படம் வெளியாக உள்ளது. 

இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கி இருக்கும் இந்த படத்தில், நடிகை பூர்ணா, வெங்கட் பிரபு, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், 'லாக்கப்' படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக, அதன் சமூக வலைதள பக்கத்தில் அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல் படக்குழுவினரை மகைழ்ச்சியடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.