தமிழில் நடிகர் நானி நடித்த 'ஆஹா கல்யாணம்' படத்தில் நடித்தவர் நடிகை 'வாணி கபூர்'. நல்ல உயரம் மற்றும் உடல் கட்டு கொண்ட நடிகை என்பதால் இவர் கோலிவுட் திரையுலகில் அடுத்த சிம்ரன் என்கிற இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் இவர் பாலிவுட் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கியதால், பாலிவுட் திரையுலகில் நடிக்க வந்த படங்களை தவிர்த்து விட்டார்.

இவர் தன்னுடைய அழகை மேம்படுத்திக்கொள்ள பிளஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். ஆனால் இந்த சர்ஜரியால் இவருடைய அழகு முற்றிலும் போய் விட்டது என பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

இவர் தாராளமாக கவர்ச்சி காட்ட தயாராக இருந்தும் இவருக்கு பட வாய்புகள் மட்டும் கிடைக்க வில்லை. இது குறித்து அவரிடம் யாராவது கேட்டால். "நான் பிளஸ்டிக் சர்ஜரி எதுவும் செய்துக்கொள்ள வில்லை. உடல் எடையை குறைக்க சில பயிற்சிகள் மேற்கொண்டேன் உடல் எடையுடன் முகத்தில் சிறு மாற்றம் ஏற்பட்டு விட்டது என கூறி சமாளித்து வருகிறாராம். சமீபத்தில் கூட இவர் கவர்ச்சியின் உச்சத்தில் ஒரு போட்டோ ஷூட் நடத்தினார் எனபது குறிப்பிடத்தக்கது.