தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களின் பேவரைட் நடிகையாக இருந்தவர் த்ரிஷா. சமீபத்தில் வெளியான 96 படத்தில் ஜானுவாக வந்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். அந்த கேரக்டரை த்ரிஷாவைத் தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியாது என ரசிகர்கள் கொண்டாடினர். பேட்ட படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்தார். தற்போது படவாய்ப்புகள் ஏதும் இல்லாததால், வெளிநாட்டில் ரிலாக்ஸ் செய்து கொண்டிருந்த த்ரிஷா. மீண்டும் அதே வேகத்தோடு, பிசியாக நடிக்க உள்ளார். 

அடுத்த ரவுண்டுக்கு தயாராக  உள்ள த்ரிஷாவின் கைவசம் தற்போது 6 படங்கள் உள்ளன, கர்ஜனை, பரமபதம் விளையாட்டு, ராங்கி, சுகர் ஆகிய படங்கள் இல்லாமல் மனிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்திலும் த்ரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் த்ரிஷாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ள இந்த சமயத்தில், த்ரிஷாவின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள் சில சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

தற்போது மலையாளத்தின் முன்னணி இயக்குநரான ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் ஹீரோவாக நடிக்கும் படம் ராம். இதற்கு முன்னதாக இவர்கள் கூட்டணி அமைத்த த்ரிஷம் திரைப்படம் மலையாள திரையுலகில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்துள்ளது. ராம் படத்தில் மோகன் லாலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க  உள்ளார். 

அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை நேற்று கொச்சியில் நடைபெற்றது. அதில் மோகன் லால், த்ரிஷா  உள்ளிட்டோர் பங்கேற்றனர். 36 வயதாகும் த்ரிஷா அந்த அடையாளம் சிறிது கூட தெரியாத படி, 17 வருடங்களுக்கு முன்பு எப்படி சினிமாவில் அறிமுகமானாரோ அப்படியே இன்னும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தகதகக்கும் தங்க மாம்பழமாக த்ரிஷாவை பார்த்த அவரது ரசிகர்கள், ராம் பட பூஜையில் த்ரிஷா பங்கேற்ற புகைப்படங்களை சோசியல் மீடியாவில் அதிக அளவில் ஷே செய்து வருகின்றனர். 

மேலும் த்ரிஷா அதே உடையில் அழகான போட்டோ ஷூட் ஒன்றையும் நடத்தியுள்ளார். அழகான ஸ்லீவ் லெஸ் மார்டன் உடையில், க்யூட் போஸ் கொடுத்துள்ள த்ரிஷாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேற லெவலுக்கு ட்ரெண்டாகி வருகிறது.