Actress Trisha breaks out of Sami film

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘சாமி 2’ படத்தில் இருந்து நடிகை திரிஷா திடிரென விலகினார்.

இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சாமி 2’.

தற்போதுதான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகிகளில் ஒருவரான நடிகை திரிஷா திடிரென பட ஒப்பந்தத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல்கள் வெளியிட்டுள்ளார்.

இந்த தகவலை திரிஷா தனது டிவிட்டரில் உறுதி செய்துள்ளார். படக் குழுவினர்களுக்கும் தனக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து தான் விலகுவதாக திரிஷா தன்னுடைய டிவிட்டா் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், அந்த பதிவில் படக்குழுவிற்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார் திரிஷா.