’சினிமா பார்த்தால் அதை தியேட்டர் வாசலோடு மறந்துவிடுங்கள்’...மாணவிகளுக்கு த்ரிஷா அட்வைஸ்...
’சினிமா என்பது முழுக்க முழுக்க கற்பனை சம்பந்தப்பட்டது. எனவே படம் பார்க்கச் செல்லும் மாணவிகள் தியேட்டரை விட்டு வெளியே வரும்போது, அதன் தாக்கங்களை தியேட்டர் வாசலிலேயே விட்டுவிட்டு வந்துவிடவேண்டும்’என்று நடிகை த்ரிஷா மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
’சினிமா என்பது முழுக்க முழுக்க கற்பனை சம்பந்தப்பட்டது. எனவே படம் பார்க்கச் செல்லும் மாணவிகள் தியேட்டரை விட்டு வெளியே வரும்போது, அதன் தாக்கங்களை தியேட்டர் வாசலிலேயே விட்டுவிட்டு வந்துவிடவேண்டும்’என்று நடிகை த்ரிஷா மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
நடிகை த்ரிஷா யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண தூதராகவும் செயல்பட்டு வருகிறார். இன்று சென்னை ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியில் யுனிசெப் சார்பில் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சுமார் மூவாயிரம் பேர் வரை கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் மாணவிகளின் கேள்விகளுக்கு திரிஷா பொறுமையாகப் பதில் அளித்தார்.
கேள்வி பதில் பகுதியின் நிறைவில் சிறிய உரை ஆற்றிய த்ரிஷா,’ பெண்கள், குழந்தைகளின் அதிகாரத்தை அதிகரிப்போம். இணையதள குற்றங்களில் இருந்தும் குழந்தைகளை பாதுகாப்போம். பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களை பிறரால் புரிந்துகொள்ள முடியாது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. 2014-ம் ஆண்டு முதல் 2016 வரையில் போக்சோ சட்டத்தின் கீழ் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2014-ம் ஆண்டு 9 ஆயிரமாக இருந்த குழந்தைகளுக்கு எதிராக இருந்த பாலியல் வழக்குகள் 2016-ல் 36 ஆயிரமாக அதிகரித்துவிட்டது. பாலியல் துன்புறுத்துதல் வழக்குகளில் குற்றவாளிகள் 95 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தவர்கள். முக்கியமாக இளைஞர்கள் இதுகுறித்து பேசவும், செயல்படவும் முன்வரவேண்டும். திரைப்படங்களை சீரியசாக எடுத்துக்கொள்ள கூடாது. அவை கற்பனை மட்டுமே. அதை பின்பற்ற கூடாது. கல்லூரி மாணவிகள் படம் பார்க்கச்செல்லும்போது அப்படத்தினால் ஏற்படும் தாக்கங்களை தியேட்டர் வாசலோடு விடுவிட்டு வந்துவிடவேண்டும்’என்று பேசினார் த்ரிஷா.