செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் கல்லூரி காலங்களில் தான் செய்த வேலை குறித்து நடிகை டாப்சி துணிச்சலாக பேசியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு டாப்சி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- டெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் தான் நான் படித்தேன். படிக்கும் போது நான் ரேங்க் ஹோல்டர். பல்கலைக்கழக அளவில் மெடல்களை வென்றுள்ளேன். நன்றாக படித்தாலும்  எனக்கு நடிகையாக வேண்டும் என்கிற ஆசை இருந்து கொண்டே இருந்தது. இருந்தாலும் கல்லூரியில் நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்து கொண்டு பிரபல நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன்.

ஆனால் நடிக்க வேண்டும் என்கிற ஆசையால் அந்த வேலையை ராஜினாமா செய்தேன். பின்னர் படத்தில் நடிக்க தொடர்ந்து வாய்ப்பு தேடினேன். நான் திரைப்படங்களில் நடிக்க என் வீட்டில் சப்போர்ட் இல்லை. இதனால் எனக்கு செலவுக்கு கூட வீட்டில் இருந்து பணம் கிடைக்காது. இதனால் பேசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். பிரபல நிறுவனங்களில் நடைபெறும் பேசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்பு வரும்ஆனால் அரைகுறை ஆடையில் உடலை காட்டி மேடையில் நடக்க வேண்டியிருக்கம். செலவுக்கு பணம் தேவை என்பதால் வேறு வழியில்லாமல் குட்டி குட்டி உடையில் மேடையில் ஒய்யாரமாக நடந்தேன். தற்போது கூட நான் பல்வேறு படங்களில் நடித்தாலும் கூட மிடிஸ் கிளாஸ் மைன்ட் செட்டில் தான் இருக்கிறேன். இவ்வாறு அந்த பேட்டியில் டாப்சி கூறியுள்ளார்.