ஊரடங்கு காரணமாக, அணைத்து சினிமா பணிகளும் முடங்கியுள்ளதால், திரையுலகை சேர்ந்த பெப்சி தொழிலாளர்களுக்கும், நலிந்த கலைஞர்களுக்கும், திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர் - நடிகைகள் பலர் முன்வந்து உதவி செய்து வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகை காஜல் அகர்வாலை தொடர்ந்து பிரபல நடிகை தமன்னா தெலுங்கு திரையுலகினருக்கு ரூபாய் 3 லட்சம் மட்டுமே உதவிகளை அறிவித்தார்.

தமிழ் - தெலுங்கு என இரு திரையுலக ரசிகர்களையும் கவர்ந்து முன்னணி நடிகையாக இவருக்கு இவர், கோடிகளில் சம்பளம் வாங்கும் நிலையில், தெலுங்கு திரையுலகை சேர்த்தவர்களுக்கு மட்டும் ரூபாய். 3 லட்சம் நிதி உதவியை கிள்ளி கொடுத்துள்ளார் என்கிற விமர்சனங்களும் பறந்தன.

இந்நிலையில்,  நடிகை தமன்னா அதிரடியாக தன்னுடைய அடுத்த உதவிகளை அறிவித்துள்ளார். ஆனால் இது திரையுலக பணியாளர்களுக்கோ... அல்லது நலிந்த கலைஞர்களுக்கோ இல்லை. 

மும்பையில் வாழ்த்து வரும், நலிவுற்ற மக்கள், முதியோர் இல்லம் போன்றவற்றிற்கு, 50 டன் உணவு பொருட்களை வழங்கியுள்ளார். இதன் மூலம் 10 ,000 யிரத்திற்கும் அதிகமான குடும்பங்களின் உணவு பற்றாக்குறை நீங்கும் என கூறப்படுகிறது.

தமன்னாவின், இந்த செயல் பாராட்டுவதற்குரியது என்றாலும்... என்றும் ஏற்றி விட்ட நூலை பட்டம் மறக்காமல், தன்னுடைய ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் பல்வேறு விதத்தில் உதவியாக இருந்த கூலி தொழிலாளர்களை மறக்காமல், அணைத்து முன்னணி நடிகர் - நடிகைகளும் தங்களால் முடிந்த உதவிகளை, தொழிலாளர்களுக்கு செய்ய வேண்டும் என்பதே திரையுலகை சேர்ந்தவர்களின் கருத்தாக உள்ளது.