தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. த்ரிஷா, நயன்தாராவிற்கு பின் அதிக காலம் தமிழ் திரையுலகத்தில் முன்னணி நடிகையாக நடிக்கும் பெருமை இவரை தான் சேரும்.

விஜய், அஜித், என முன்னணி நடிகர்கள் படங்களில் நடிப்பதில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தி வந்த இவர், சமீப காலமாக... குறிப்பாக பாகுபலி படத்திற்கு பின் கதைக்கும், கதாப்பாத்திரத்திற்கும் முக்கிய துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் நடிக்க வரவில்லை என்றால் வேறு என்ன வேளைக்கு சென்றிருப்பீர்கள் என  கேட்டதற்கு, "நடிப்பை தவிர வேறு எதையும் என்னால் நினைத்து கூட பார்க்கவில்லை. ஆனால் ஒருவேளை நடிகை ஆகாமல் இருந்திருந்தால் மருத்துவர் ஆகியிருப்பேன் என கூறியுள்ளார்".

இதற்கு காரணம் என் குடும்பமாகத்தான் இருக்கும், என் குடும்பத்தில் பலர் மருத்துவராக தான் உள்ளனர், அவர்களையே பின் பற்றி நானும் மருத்துவராக இருந்திருக்க வாய்ப்பு உண்டு என கூறியுள்ளார்.