நடிகை தம்மனா, தான் உடல் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, பயிற்சியாளர் இல்லாமல் இது போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் வைத்துள்ளார். 

தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, இந்த கொரோனா விடுமுறையில் அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களில், இந்த ஊரடங்கு ஓய்வை எப்படி கழித்து வருகிறார் என்பதை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக, பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில் தன்னுடைய ரசிகர்களுக்கு, உடல் பயிற்சிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில், வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் அவர் தலைகீழாக நிற்க அவரின் பயிற்சியாளர் ஆரம்பத்தில் உதவி செய்தாலும், பின் அங்கிருந்து சென்று விடுகிறார். தமன்னாவும் சில நொடிகள் எவ்வித பிடிப்பும் இல்லாமல் நிற்கிறார். பின் தமன்னா விழுந்தது போல் தெரிகிறது.  

இந்த வீடியோவை வெளியிட்டு தெரிவித்துள்ள தம்மனா, ‘வீழ்ச்சி மற்றும் தோல்வியினால் மனம் துவண்டுவிட வேண்டாம்.  பல தோல்விகளுக்கு பின்னரே வெற்றி கிடைக்கும். பலமுறை முயற்சி செய்து, பலமுறை விழுந்த பின்னரே என்னாலும் தலைகீழாக நிற்க முடிந்தது. ஆனால் தயவு செய்து யாரும் இதனை பயிற்சியாளர் இல்லாமல் தனியாக செய்ய வேண்டாம்’ என்று வேண்டுகோள் ஒன்றையும் வைத்துள்ளார்.

தமன்னாவின் உடல் பயிற்சி வீடியோ இதோ...