தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்துவரும் தமன்னா அண்மையில் லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற இணைய தொடரில் தன்னோடு நடித்த நடிகர் விஜய் வர்மாவுடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் தற்பொழுது வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்திய மொழிகள் பலவற்றில் பிஸியாக நடித்து வரும் பிரபல நடிகை தமன்னா அவர்கள் சமீபத்தில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற இணையத் தொடரில் நடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அதே நேரத்தில் அந்த இணைய தொடரில் தன்னுடன் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் டேட்டிங் செய்வதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் அந்த தகவலை அவர் உறுதிப்படுத்திய நிலையில், சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் வர்மாவும் தான் தம்மனாவோடு டேட்டிங் செய்து வருவதை உறுதிப்படுத்தினார். சில தினங்களுக்கு முன்பு ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய விஜய் வர்மா, தற்பொழுது தனது வாழ்க்கையில் நிறைய அன்பும், காதலும் நிறைந்து இருக்கிறது என்றும், தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். 

கழண்டு விழும் சட்டை... பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி காட்டிய மிர்ணா! கிளாமரில் கிக் ஏற்றும் ஹாட் போட்டோஸ்!

மேலும் இதுகுறித்து பேசிய நடிகை தம்மனா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 படபிடிப்பின் போது தான் தங்களுக்குள் அந்த காதல் மலர்ந்ததாக கூறினார். அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் திரைப்படமும் அதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நான் முழுமையாக நம்பக்கூடிய ஒரு நபராக உள்ளார் என்றும், அவர் மீது காதல்வயப்பட்டதாகவும் கூறியுள்ளார். 

View post on Instagram

தமன்னா மற்றும் விஜய் ஆகியோரின் உறவு குறித்து கிசுகிசுகள் பல வைரலாக பரவிய நிலையில் தான் விஜயுடன் டேட்டிங் செய்து உறுதிப்படுத்தினார் தமன்னா என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமன்னாவும் விஜயும் விடுமுறைக்காக வெளிநாட்டுக்கு புறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. 

இன்று ஆகஸ்ட் 26 அன்று, அவர்கள் இருவரும் தனி தனியாக விமான நிலையத்திற்கு வரும் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இருவரும் தனித்தனியாக வந்திருந்தாலும், அவர்கள் ஒரு ரொமான்டிக் விடுமுறைக்காக வெளிநாட்டுக்கு செல்வதாக நம்பப்படுகிறது.

இதுல லட்சுமி யார்? பட்டு புடவையில் தெய்வீக கலையுடன் ஸ்ரீதேவி வெளியிட்ட வரலட்சுமி பூஜை போட்டோஸ்..!