இந்தி திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ஸ்வேதா பாசு. மும்பையை சேர்ந்த இவர் பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். மக்டே எனும் இந்திப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார். தொடர்ந்து ஏராளமான தெலுங்கு படங்களிலும் ஸ்வேதா நடித்தார். இதன் மூலம் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை ஆனார். 

பின்னர் தமிழ் திரையுலகிற்கும் ஸ்வேதா அறிமுகம் ஆனார். தமிழில் நடிகர் உதயவுடன் ‘ராரா’, ‘ஒரு முத்தம்  ஒரு யுத்தம்’, ‘சந்தமாமா’ ஆகிய படங்களிலும் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர். 

இந்த நிலையில் கடந்த 2014ம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் போலீசார் ரெய்டு சென்றனர். அப்போது அறையில் வாடிக்கையாளர் ஒருவருடன் பாலியல் தொழில் செய்து கொண்டிருந்ததாக ஸ்வேதா பாசு கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்வேதா பாசுவை பெண்கள் சீர்திருத்த மையத்திற்கு நீதிபதி அனுப்பி உத்தரவிட்டார். இதன் பிறகு அங்கு சில நாட்கள் இருந்த ஸ்வேதாவுக்கு ஜாமீன் கிடைத்தது. விபச்சார வழக்கை தொடர்ந்து நடத்திய ஸ்வேதா அந்த வழக்கில் இருந்து நிரபராதி என்று விடுதலை பெற்றார். ஸ்வேதா விபச்சாரம் செய்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று நீதிபதி கூறினார்.

இந்த சர்ச்சைக்கு பிறகு ஸ்வேதாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களிலும், இந்தி சீரியல்களிலும் ஸ்வேதா பிசியானார். 

இந்த நிலையில் கடந்த வருடம் இயக்குனர் ரோஹித் மிட்டலுடன் ஸ்வேதாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தாங்கள் 5 வருடங்களாக காதலித்து வருவதாக ஸ்வேதாக கூறியிருந்தார். இந்த நிலையில் மும்பையில் ஸ்வேதா – ரோஹித் திருமணம் கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி பிரமாண்டமாக நடந்து முடிந்தது. 

இந்நிலையில் இவர்களுக்கு திருமணம் ஆகி இன்னும் ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், ஸ்வேதா பாசு - ரோஹித் மிட்டாலுடன் மனம் ஒற்று விவாகரத்து பெற உள்ளதாக கூறி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்வேதா பாசு பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில்... அனைவருக்கும் வணக்கம், நானும், ரோஹித்தும், மனம் ஒற்று விவாகரத்து பெற உள்ளோம். தங்களுடைய மண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. இந்த முடிவை சில மாதங்களுக்கு முன்பே இருவரும் எடுத்து விட்டோம். இதில் நல்லது கெட்டது என இரண்டுமே உள்ளது என கூறியுள்ளார். மேலும் நன்றி ரோகித். உன்னுடைய இடத்தையும் அழகிய நினைவுகளையும் மாற்ற முடியாது.  நீ என்னை அதிகம் இன்ஸ்பிரேஷன் பண்ணி உள்ளாய். அழகான வாழ்க்கையை கொடுத்ததற்கு நன்றி என தெரிவித்துள்ளார் ஸ்வேதா பாசு.