தமிழ் திரையுலகில் காதல், ரொமான்ஸ், லிப் டூ லிப் காட்சி என்றால் முதலில் பலருக்கும் நினைவிற்கு வரும் நடிகர் 'கமல்ஹாசன்' தான். ஆனால் 'சந்திரலேகா' சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஸ்வேதா, சற்று வித்தியாசமாக மற்றொரு நடிகரின் பெயரை கூறியுள்ளார்.

நடிகை ஸ்வேதா, அஜித் நடித்த ஆழ்வார் படத்தில், அஜித்துக்கு தங்கையாக அறிமுகமானவர். பின் நடிகர் விவேக்கிற்கு ஜோடியாக 'வள்ளுவன் வாசகி' படத்தில் நடித்தார். ஆனால் இவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றி பெற வில்லை. 

இதைத்தொடர்ந்து, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'சந்திரலேகா' என்கிற சீரியலில் நடித்தார். இந்த சீரியலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இந்நிலையில், இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், லிப் லாக் அடிப்பதில் சிறந்த நடிகர் யார் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு தற்போதைய நடிகர்களில் லிப் லாக் அடிப்பதில் கில்லி நடிகர் விஜய் தேவரகொண்டா என கூறியுள்ளார். 

குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம், காம்ரேட் ஆகிய படங்களில் இவரின் முத்த காட்சி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.