இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு அஜித் கதாநாயகனாகவும், ஸ்வாதி கதாநாயகியாகவும் நடித்து வெளியான திரைப்படம் 'வான்மதி'. 

தற்போது நடிகை ஸ்வாதி, பிரபல ஊடகம் ஒன்றிற்கு, கொடுத்துள்ள போட்டியில்... அஜித்துடன் வான்மதி பட ஷூட்டிங்கில் நடித்த அனுபவம் பற்றியும் கூறியுள்ளார்.

இந்த போட்டியில் பொதுவாகவே அஜித், பெண்களுக்கு மிகவும் மரியாதை கொடுப்பவர் என்பது அனைவருக்கும் தெரியும். வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் போது அவர் அப்படிதான் இருந்தாரா...? என செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த நடிகை ஸ்வாதி ஒருமுறை 'வான்மதி' படப்பிடிப்பின் போது... ஜூனியர் ஆர்ட்டிஸ்டை படப்பிடிப்பு பார்க்க வந்த ரசிகர்கள் சில கிண்டல் செய்தனர். உடனே அஜித் அங்கு சென்று, தட்டிக்கேட்டார். பெண்களிடம் இப்படித்தான் நடந்து கொள்வதா என துணைநடிக்காக சண்டைபோட்டர்.

பொதுவாக ஹீரோக்கள் இப்படியெல்லாம் செய்யமாட்டார்கள். ஆனால் அஜித் அவர்களிடம் இருந்து சற்று வித்தியாசமாகவே இருந்தார். அப்போதில் இருந்தே பெண்கள் மீது மரியாதை வைத்துள்ளனர் என கூறியுள்ளார்.