கவி பேரரசு வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகாரை தெரிவித்த பின்னர் தற்போது இந்த விவகாரம் மூலம் பல பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் வன்புணர்வு பற்றி வெளி உலகிற்கு சொல்ல தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் சின்மயிக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் ஆதரவு குரல் கொடுத்து வந்தாலும், ஒரு சிலர் முரண்பட்ட கருத்தை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் சித்தார்த், சமந்தா, வரலட்சுமி, கஸ்தூரி, ஸ்ரீ ரெட்டி உள்ளிட்டோர் சின்மயிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஸ்வர்ணமால்யாவும் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் இந்த பிரச்சனைக்கு சட்ட ரீதியாக ஆலோசனை செய்து வருவதாகவும், எதிர்காலத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் கொடுமை செய்பவர்களுக்கு இந்த சட்ட நடவடிக்கை நல்ல பாடத்தை புகட்டும் என ஆதரவு குரல் கொடுத்து உள்ளார்.

தற்போதைய நிலையில், பாடகி சின்மயிக்கு ஆதரவாக அதரவு குரல் கொடுத்து வருபவர்கள் அதிகமாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.